ஹெச்.எம்., மர்ம சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹெச்.எம்., மர்ம சாவு

Added : பிப் 14, 2020
Share

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், அரசு விளையாட்டு மைதானத்தில், பள்ளி தலைமையாசிரியர், மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை, அண்ணா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன், 52; இவர் கல்லாவி அடுத்த ஆனந்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை, ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில், வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிகாலையில், உடற்பயிற்சி செய்ய மைதானத்துக்கு வந்த பொதுமக்களின் தகவலின்படி, ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடம் சென்று, மணிவண்ணனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X