மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Added : பிப் 14, 2020
Share
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை, போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றவர். போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றில், மணல் கடத்தப்படுவதாக, பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ரவி தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியே மணல் கடத்தி வந்த

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை, போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றவர். போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றில், மணல் கடத்தப்படுவதாக, பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ரவி தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தியதும், அதிலிருந்த ஓட்டுனர் உள்பட இரண்டு பேர் தப்பியோடினர். போலீசார், டிப்பர் லாரியை மணலுடன், பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X