புல்வாமா நினைவு தினம்: அவமதித்த கம்யூ., தலைவர்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (57)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு தினத்தை மத்திய அரசு இன்று அனுசரிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இது நாட்டின் திறமையின்மையை நினைவுபடுத்தும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி முகம்மது சலீம் தெரிவித்துள்ளது பலரின் எதிர்ப்பை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு பிப்.,14 அன்று சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே கொந்தளிக்க வைத்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை நினைவு கூரும் விதமாக புல்வாமா நினைவு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி முகம்மது சலீம் கூறுகையில், நாட்டின் திறமையின்மையை காட்டும் இச்சம்பவத்தை நினைவு கூருவதை விட, இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதற்கு நாம் பதிலளிக்க வேண்டும்.
நமது திறமையின்மையை நாம் நினைவு கூர தேவையில்லை. உலகிலேயே அதிக ராணுவ மயமாக்கப்பட்ட பகுதி என வர்ணிக்கப்படும் சர்வதேச எல்லை வழியாக 80 கிலோ ஆர்டிஎக்ஸ் எடுத்து வரப்பட்டு, புல்வாமாவில் வெடிக்க செய்யப்பட்டது எப்படி என்பது மட்டுமே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. புல்வாமா தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - chaennal,இந்தியா
15-பிப்-202008:04:20 IST Report Abuse
srinivasan Let these peopel( who are opposing the martyrs day) go to border and give security to the nation. Why they are allowed to shout here.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-202021:02:02 IST Report Abuse
Sriram V It's really unfortunate that none of the leaders condemn this. Strange people. You are insane to minority community
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-பிப்-202020:41:04 IST Report Abuse
Rajagopal இந்த கம்யூனிஸ்டு கேட்ட அதே கேள்வியை சீமான் முன்பு கேட்டிருக்கிறார். சீமான் என்னவோ பாஜக அரசு தேர்தலுக்காக அந்த மாதிரி ஏற்பாடு செய்து, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதாக ஒரு கதையையும் சொன்னார். யு டியூபில் பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X