சபாநாநயகர் முடிவெடுப்பார்: 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (59) | |
Advertisement
புதுடில்லி : தமிழக அரசுக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, காலக்கெடு விதிக்க முடியாது. அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.திமுக முறையீடு ஜெயலலிதா மறைவுக்குப்
supremecourt, paneerselvam, speaker, tamilnadu, jayalalithaa, ஒபிஎஸ், பன்னீர்செல்வம், சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம், தகுதிநீக்கம், சபாநாயகர், அதிமுக, ஜெயலலிதா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தமிழக அரசுக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, காலக்கெடு விதிக்க முடியாது. அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.2017ல் எடப்பாடி பழனிச்சாமி அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரியபோது, ஓ.பன்னீர்செல்வம், மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக வழக்கு போட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன் வௌ்ளியன்று விசாரணைக்கு வந்தது. ''11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சபாநாயகரே முடிவெடுக்கட்டும். அவருக்கு கோர்ட் உத்தரவிடாது'' என்று சொல்லி வழக்கை முடிப்பதாக, நீதிபதிகள் அறிவித்தனர். இந்தவிஷயத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவையும் சுப்ரீம் கோர்ட் விதிக்கவில்லை. இது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. ஒருவேளை, 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் சட்டசபையில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்திருக்கும். அந்த ஆபத்திலிருந்தும் அரசு தப்பிப்பிழைத்துள்ளது.

திமுக முறையீடு


ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.முக., இரண்டாக பிரிந்தது. பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து, 2017 பிப்ரவரியில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரியது.அப்போது, தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. இவர்கள் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, 11 பேரும் மீண்டும் இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

இதையடுத்து, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக் செய்யக்கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'சபாநாயகர் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகிய, தி.மு.க., தரப்பு, இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி முறையிட்டது.


latest tamil news
சபாநாயகருக்கு நோட்டீஸ்


இதையடுத்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், பிப்., 4 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் முடிவு எடுக்க, சபாநாயகர் மூன்று ஆண்டுகளாக தாமதம் செய்தது ஏன்... இந்த விஷயத்தில், மூன்று ஆண்டு தாமதம் என்பது தேவையில்லாத ஒன்று. இதில், தமிழக அரசு முடிவு என்ன என்பது குறித்து, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.காலக்கெடு விதிக்க முடியாது


இந்நிலையில், இந்த வழக்கு இன்று(பிப்.,14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. சபாநாயகருக்கு காலக்கெடுவும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில், சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202023:30:27 IST Report Abuse
kulandhai Kannan இலவு காத்த கிளி ஒரு மெகா சீரியலாகிறது
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-பிப்-202022:36:41 IST Report Abuse
Krishna Since V.Long, Courts have Lost Supreme People’s Confidence for NEUTRAL-UNBIASED JUSTICE By their Extreme Bias With Complainants-Police & Officials-Media-Rulers, Just for their Selfish Vested Interests (Pay & Promotions, Power, Strength Increase, Advocates Livelihood etc). Hence, ABOLISH ALL COURTS (with all Incumbents without Any Benefits) NOT PUNISHING FALSE COMPLAINANTS, MAL-PROPAGATING MEDIA, POWER MISUSING OFFICIALS (incl. Case-Cooking Police) & RULERS (also Dead Slow, Poor Quality, V.Costly, Non-Simple Procedured, Never Encouraging Litigants to fight themselves). 95% COURTS WILL VANISH But NEW COURTS from Non-Advocates with good Post-ion Training in Law. Though Possible, Elected Reps Wont Do (Anti-People) for Selfishly Extracting Benefits from All Officials (esp. Police & Judges). Higher Judiciary (Parliamentary Justice Committee for SC Judges) also Wont Punish All Erring Judges in Auto-Appeals. TO SOLVE BURNING PROBLEMS, Simply FIGHT FOR EVERY YEAR ELECTIONS (Non-Costly)-Elected Reps wont Forget Supreme People, Compel VVV Fattened Officials to Work Properly for People & Will Not Have Time to Loot. Broadbased PEOPLE'S REP COMMITTEES headed by Loksabha MPs (atleast 50% from All-Erstwhile Oppositions-MP, MLAs-Ward Counsillors) MUST ADMINISTER ALL ASPECTS OF PEOPLE’S LIFE (Incl. Justice). Otherwise Only GOD Can SAVE the Countries & World.
Rate this:
Cancel
Dubuk U - Chennai,இந்தியா
14-பிப்-202021:36:27 IST Report Abuse
Dubuk U அந்த சமயத்தில் கொறடா யார் ? யாரின் உத்தரவை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்கவேண்டும்? உண்மையில் 122 பேரை தகுதி நீக்கம் செய்ய சொல்லியிருந்தாலும் பரவாயில்லை... காரணம் அந்த 11 பேரில் ஒருவர் தான் அப்போதைய கொறடா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X