இந்தியாவில் 2 லட்சம் வெளிநாட்டு மாணவர்: மோடி எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 2 லட்சம் வெளிநாட்டு மாணவர்: மோடி எதிர்பார்ப்பு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (14)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக யோகா, புத்த மதம் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பாக குறுகிய கால படிப்புகளை இந்தியாவில் துவக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.latest tamil news'இந்தியாவை நோக்கி' என்ற திட்டத்தை முன்னிலைப்படும் விதமாக, கல்வித்துறையில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் வந்து படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக யோகா, புத்த மதம், ஆயுர்வேதம் போன்றவை தொடர்பான குறுகிய கால பட்டயபடிப்புக்களை உருவாக்கவும், அதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மாணவர்களை இந்தியா வரவழைப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.


latest tamil newsஇந்திய கலாச்சார தொடர்பு கழகம், மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரம், வெளிநாட்டு விவகாரத்துறை, உள்துறை விவகாரத்துறை, பல்நோக்கு துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து இந்த படிப்புக்களை வழங்க உள்ளன. 2022 ம் ஆண்டிற்குள் 2 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவிற்கு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசா நடைமுறைகளை எளிமைபடுத்தவும், இந்திய பல்கலைகளிலும், இந்த படிப்புக்களை வழங்கும் கல்வி நிறுவனங்களில் வசதிகளை அதிகரிக்கவும், வெளிநாட்டு பல்கலை., மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய கலாச்சார கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news
இது பற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்தியாவில் படிப்பு என்ற திட்டத்தின் கீழ் யோகா, ஆயுர்வேதம் மற்றும் புத்த மதம் போன்ற இந்தியா சார்ந்த படிப்புகளை அதிகம் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடுகளில் இருந்து அதிக அளவிலான மாணவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் பயில வைப்பதே இதன் நோக்கம் என்றார்.

இதன் மூலம் இந்தியாவின் கலாச்சார மற்றும் சமூகம் பற்றி எளிதில் அறிந்து கொள்ள முடியும், நிதி உதவி கிடைக்கும், உணவ மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மேம்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்திற்கம் அதிகமான சர்வதே நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று வருகின்றனர். அதிகபட்சமாக 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் 3.47 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விசா அளிக்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X