பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. நாமக்கல் அடுத்த, முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழ் மன்றம் சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது. தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். பேச்சு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய பாடல் பாடுதல், கவிதை வாசித்தல், நல்ல கருத்துகளை கூறுவதில் சிறந்தவை பழைய பாடலா, புதிய பாடலா? என்ற் தலைப்பில் பாட்டுமன்றம் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி மீனா, கவிதைப் போட்டியில் விகாஸினிகா, கமலி, ஜீவிதா, சுஜிதா, சரண்யா, பிரியங்கா, அஸ்வதி, மைதிலி, வேல்முருகன், ராகேஷ், தீப்தி, சமிஸ்தா, சந்தோஷ், மோனிஷ் வெற்றி பெற்றனர். பாட்டுப் போட்டியில் சமிஸ்தா, கவுஷிக், தர்ஷினி, மணிகண்டன், சந்தோஷ், காமாட்சி, தீப்தி, சமிஸ்தா, பட்டி மன்றத்தில் விஷ்ணுவர்தன், ராஜேஷ்குமார் வீரக்குமார், ரித்திகா, மாறன், மகேஷ்வரன் சசிதரன், தனிஷ், ஹரிப்பிரியா, சமிஸ்தா, தீப்தி, சுப்ரியா உள்ளிட்ட மாணவ, மாணவியர் பேசினர். தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X