நாட்டில் சட்டமே இல்லையா?: சுப்ரீம் கோர்ட் காட்டம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (41)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிம கட்டணம் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த நாட்டில் சட்டம் என்பதே இல்லை எனவும், நாட்டை விட்டு வெளியேறுங்கள் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளது.

அடிப்படை சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை அடிப்படையில் மொபைல் போன் விற்பனை, டிவிடெண்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இதனை ஏற்க மறுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டன.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2004 முதல் 2015 வரை கணக்கிட்டு தொகையை அரசுக்கு செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.47 லட்சம் கோடியை உடனடியாக செலுத்தும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில், மார்ச் 17 க்குள் அரசு கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். அரசு பிறப்பித்த உடனடி நடவடிக்கை என்ற உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லை என்றால் அந்த அதிகாரி சிறை செல்ல வேண்டி இருக்கும் என உத்தரவிட்டது.

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான உத்தரவில், கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்து முறையீடுக்கு மேல் முறையீடு செய்யும் இந்த முட்டாள்தனத்தை துவக்கி வைத்தது யார் என தெரியவில்லை. இந்த நாட்டில் சட்டம் என்பதே இல்லையா? சட்டத்தை பின்பற்ற முடியாதவர்கள் நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். நாட்டில் நடக்கும் விஷயங்கள் எங்கள் நெஞ்சை குலுக்கும் வகையில் உள்ளது. மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஒரே தவணையாக பாக்கி தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கடுமையாக தெரிவித்துள்ளது.

வோடபோன் நிறுவனம் 50,000 கோடியும், பாரதி ஏர்டெல் ரூ.35,500 கோடி, டாடா டெலிசர்வீஸ் ரூ.14,000 கோடியும் அரசுக்கு செலுத்த வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தனது பாக்கியான ரூ.60 கோடியை செலுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
14-பிப்-202022:09:45 IST Report Abuse
s.sakkaravarthi நல்ல சட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராடுறீங்களே
Rate this:
Share this comment
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
14-பிப்-202021:23:04 IST Report Abuse
Davamani Arumuga Gounder 2004 முதல் 2015 வரை கணக்கிட்டு தொகையை அரசுக்கு செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.47 லட்சம் கோடியை உடனடியாக செலுத்தும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.... அதாவது... நேர்மையாளர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலம் பூராவும் மற்றும் மோடி யின் ஆரம்பகால ஒரு ஆண்டு ஆட்சி .. சரீ... பணமில்லை , நஷ்டம் .. என்று புலம்புபவர்கள் .. இன்றைய பண மதிப்பின்படி ரூ. 550 க்கு 84 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி. நெட் இணைப்பு.. அதாவது மாதம் 60 ஜி.பி. நெட் இணைப்பு, அதற்கு கட்டணமாக 550 / 84 சற்றேறக்குறைய மாதம் ரூ. 200 என வைத்துக்கொள்வோம். ஆனால்,, சுமார் 16 ஆண்டுகளுக்கு முந்தைய பண மதிப்பு தங்கம் விலையோடு ஒப்பிட்டால் 6 மடங்கு அதாவது 2004 ல் ஒரு சவரன் தங்கம் சற்றேறக்குறைய ரூ 5000 - அன்றைய பண மதிப்பீட்டில் 1 மாதத்திற்கு 1 ஜி.பி.மட்டுமே இணைய சேவை வழங்கி.. ரூ. 350/ அதாவது அரை கிராம் தங்கத்தின் விலைக்கும் அதிகமாக கட்டணம் பெற்றார்களே.. அப்படீனா மாதம் 60 ஜி.பி. நெட் இணைப்புக்கு 2004 முதல் எவ்வளவு ரூபாய் நமக்கு செலவாகியிருக்கும், நம்மை எப்படி கொள்ளையடித்து உள்ளார்கள் ? .. இன்று .. தங்கம் 1 கிராம் விலை சுமார் ரூ. 4,000 -இதில் 20 ல் 1 பங்கு ரூ. 200 தான் மாதத்திற்கு 60 ஜி.பி. க்கு நாம் கட்டணம் செலுத்துகிறோம். இதையும் தினசரியும் உள்ள 2 ஜி.பி.க்கு கணக்கிட்டால்? ... சற்றேறக்குறைய ரூ 7 - 00.. மட்டும்தான்.. ஒரு ஜி.பி.க்கு ரூ. 3.50 மட்டுமே.. (ரூ7 x 84 = 584).. இன்று ஒரு ஜி.பி.க்கு ரூ. 3.50 ., இது 2004 ம் ஆண்டின் பண மதிப்பில் 3.50 / 8 = 50 பைசாவுக்கும் குறைவு.. இந்த 50 பைசாவுக்கும் குறைவாக உள்ள கட்டணத்திற்கு, நம் அறியாமையை பயன்படுத்தியும் 1,76,000 கோடி ஊழல் செய்தும் ரூ. 350 கட்டணம் - விழித்திருக்கும் பொழுதே கொள்ளையடிப்பதைப்போல .. இந்த ஜியோ வருவதற்கு முன்னர் நம்மிடம் வசூலித்து கல்லா கட்டினார்களே .. அந்த பணத்தை எல்லாம் பி.எஸ்.என்.எல் - ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் என்ன செய்தனர்? விஜய மல்லையாவைப்போலவே இந்த நிறுவனங்கள் எல்லோருமே நஷ்டம் என்கிறார்களே
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-பிப்-202020:47:46 IST Report Abuse
Rajagopal நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று நீதி மன்றமே சொல்லி விட்டது. இப்போது பணம் பாக்கி வைத்திருப்பவர்கள் மெதுவாக நழுவி, மல்லயா மாதிரி வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து மறைந்து விடுவார்கள். நாட்டுக்கு நாமம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X