நிர்பயா வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த நீதிபதி

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி : நிர்பயா வழக்கில் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிக் கொண்டிருந்த போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி பானுமதி மயங்கி விழுந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தனித் தேதியை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்து, மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிக் கொண்டிருந்தார், 3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பானுமதி. அப்போது திடீரென, கோர்ட் அறையிலேயே அவர் மயங்கி விழுந்தார். சக நீதிபதிகள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் அவரை, நீதிபதிகள் அறைக்கு அழைத்துச் சென்றனர்.




பின்னர் சக்கர நாற்காலி மூலம் அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த வழக்கின் உத்தரவு, நீதிபதி அறையில் வழங்கப்படும் என நீதிபதி போபண்ணா தெரிவித்தார். ஆனால் நீதிபதி பானுமதிக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், 3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி அசோக் பூஷண் இவ்வழக்கை விசாரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-202023:58:40 IST Report Abuse
Tamilan ஒரு பிரச்சினையில் ஓராயிரம் முறை விசாரிக்கிறார்கள் . திரும்ப திரும்ப விசாரிக்கிறார்கள் . நூறு முறை தீர்ப்பு கூறுகிறார்கள் . இதெல்லாம் , விஷமிகள் , தேசவிரோதிகள் , சட்டவிரோதிகள் இந்திய அரசியல்சட்டதை கூறு போட்டு தங்கள் சுய லாபங்களுக்காக விற்கின்றன என்பதைத்தான் காட்டுகின்றன . அதுவும் ,அரசியல் சட்டத்தின் அங்கீகாரத்துடன் , அரசியல் சட்டத்தி கூறு போடுகின்றனர் . இருப்பினும் , டெல்லி சார்ந்த இந்த வழக்கு, தமிழரின் மேல் ஏன் பாயவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202023:16:51 IST Report Abuse
ஜீவன் இவனுங்க கேச இழுக்கிறத பாத்தா வேற ஏதோ மேட்டர் உள்ளே ஒழிஞ்சுருக்குன்னு தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-பிப்-202022:32:23 IST Report Abuse
Krishna Mob Or Kangaroo Court Justice Must Be Mercilessly Deterred & Punished for Subverting Justice. Let There Be Quick & Maxm Punishment (incl. Death) to Real Accused (Instead of Scape-Goats propped-up to Cover-Up natural Failures of Police Investigations) through Fast-Track But Neutral-UNBIASED Investigation & Courts (possible within 06months) BUT SIMULTANEOUSLY, Conspiratorial & Vested False Complainants (Anti-Men Women Fanatics Etc), News Hungry-Media (False-Propagandas with Sensational News), Cheap-Dirty Politicians (Diverting People From Main Issues), Anti-People & Pro-Ruler Officials (incl. Police etc who Never Detect-Punish False Complainants But Cook-up Cases incl. Media MalPropaganda), Must also be Fast PUNISHED IN SAME TRIALS.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X