எல்லா பணத்தையும் எடுத்துக்கோங்க!: விஜய் மல்லையா புலம்பல்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (23)
Advertisement
VijayMallaya, PayOff, PrincipalAmount, Repay, Banks, London, விஜய்மல்லையா, மல்லையா, லண்டன், நாடுகடத்தல், வழக்கு, வங்கிகள்

இந்த செய்தியை கேட்க

லண்டன்: வங்கிகளுக்கு தான் செலுத்த வேண்டிய மொத்த அசல் தொகையையும் வங்கிகள் எடுத்துக்கொள்ளட்டும் என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அவரை நாடு கடத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, மல்லையா தொடர்ந்த வழக்கில் கடந்த மூன்று நாளாக நடைபெற்ற விசாரணை நேற்றுடன் (பிப்.,13) முடிவடைந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான பின் மல்லையா செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது: நான் எந்தவிதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை. இந்திய வங்கிகளிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீத பணத்தையும் வங்கிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அமலாக்க இயக்குநரகம், சொத்துகள் மீது தங்களுக்கு உரிமையுள்ளது என்கிறது. எனவே, ஒருபுறம் அமலாக்க இயக்குநரகமும், மறுபுறம் வங்கிகளும் ஒரே சொத்துக்கு எதிராக போராடுகின்றன. இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-பிப்-202016:46:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுக்கும் சளைச்சவர்களே இல்லீங்க முக சுடாலின் சோனியா மன்மோகன் பசிதாம்பரம் லொட்டுலொசுக்கெல்லாம் எல்லா மந்திரிகளும் பலகோடிகளுக்கே அதிபதின்ங்க இதுலே ஆள்கு என்னான்னா எவனுக்கும் ஆளும் திறமையே இல்லே என்ற உண்மைதான்தெருவோடபோற குறவனுக்கு சி எம் போஸ்ட் தந்தாப்போல கமல்நாத்த்தை சி எம் ஆக்கினா அவன் திருபுறஉண்ணுமுழிச்சுண்டு தவிக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
17-பிப்-202016:53:18 IST Report Abuse
r ganesan லண்டன் நீதிபதி ஒரு முக்கியமான விஷயத்தை நேற்று கோர்ட்டில் கூறியிருப்பதாக தெரிகிறது. கோர்ட் வசம் அன்றைய PM மன்மோகன் சிங்க்கும் நிதி அமைச்சரும் வங்கிகளுக்கு கடன் கொடுக்க சொல்லி எழுதிய சிபாரிசு கடிதம் உள்ளது. எனவே குற்றவாளி வாங்கி அதிகாரிகளா அல்லது அரசு நிர்வாஹமா என்று வினா எழுப்பியிருக்கிறாரகள்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-பிப்-202008:35:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவனை தப்பிவச்சது கான் கிரேஸ் காட்ச்சியேதான் இவனுகளுக்கெல்லாம் லோன் அள்ளிஅள்ளித்தந்தது பசி என்ற முன்னாள் நிதி மாதிரியேதான் (கிடச்ச கமிஷன் எம்பூட்டுங்கோ) தேனடையவே துன்னு எல்=ப்பம் விட்டானுக பிஜேபி வரவே எல்லோர் வண்டவாளமும் தணடவாளம் எரிண்ணே இருக்கு இன்னம் மெயின் கொள்ளைக்காரி ஆம்படலியே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X