பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மும்முரம்

Added : பிப் 14, 2020
Advertisement

எலச்சிபாளையம்: வேலகவுண்டம்பட்டியில், குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில், ஜேடர்பாளையம் காவிரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலமாக, குடிநீர் குழாய் இணைப்பு சென்று கொண்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன், குழாயில் உடைப்பு ஏற்பட்டது. வேலகவுண்டம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், உடைந்த குழாய் சரிசெய்யப்பட்டு, குழாயின் மேற்புறத்தில் எம் -சாண்ட் கொண்டு, மீண்டும் உடைப்பு ஏற்படாத வகையில் பூசி வருகின்றனர். மேலும், குழாய் இணைப்பு சரிசெய்யும் பணிக்காக, இருவழிச்சாலையாக இருந்த பாதை ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகுந்த அவதிக்குள்ளாகினர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X