பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 14, 2020
Advertisement

தண்ணீர் வினியோகம்; நடவடிக்கை தேவை: நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை மூனுசாவடியிலிருந்து, குருசாமிபாளையம் செல்லும் சாலையில் செம்மாம்பட்டி உள்ளிட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிதான் இப்பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான தொட்டிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இல்லையெனில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டு விடுகிறது. சாலையோர தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகிக்க வேண்டும்.
வடிகாலில் குப்பை; சுகாதார சீர்கேடு: பள்ளிபாளையம் அடுத்த, ஒன்பதாம்படி பகுதியில் பிரதான வடிகால் செல்கிறது. இரவு நேரத்தில் சிலர் குப்பை, கழிவு கொட்டுகின்றனர். தீயும் வைத்து விடுகின்றனர். இதனால், ஒரு சில சமயத்தில் புகை மண்டலமாக காணப்படுகிறது. வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல தடை ஏற்படும். எனவே, வடிகாலில் குப்பை கொட்டுவதை தடை செய்ய எச்சரிக்கை பலகையும், இதையும் மீறி குப்பை கொட்டுபவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

கேட் வால்வு உடைப்பு சரி செய்யப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையாம்பாளையத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன், தண்ணீர்தொட்டி அருகே, கேட்வால்வு அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, கேட் வால்வு உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வருகின்ற போதெல்லாம் அதிகளவில் தண்ணீர் வெளியாகிறது. பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகின்றனர். தரமான கேட்வால்வு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை எரிக்க தடை தேவை: குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் எதிரிலுள்ள உடையார்பேட்டை பகுதியில் அதிக குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் அடிக்கடி குப்பை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், போலீஸ் ஸ்டேஷன் பகுதி முழுவதும் பல மணி நேரம் கரும்புகையால் சூழப்படுகிறது. பலருக்கும் இந்த புகையால் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. பலரையும் பாதிக்கும் இது போன்ற செயல்களை செய்ய தடை விதிக்க வேண்டும்.

பயனில்லாத சாலை; மக்கள் கடும் அவதி: பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, வெப்படை அடுத்த சின்னார்பாளையம் பகுதியில், வாய்க்கால் அருகே செல்லும் சாலையில் இருந்து, குடியிருப்புக்கு செல்ல படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பராமரிப்பு இல்லாமல், முட்புதர் வளர்ந்துள்ளதால், பயனில்லாமல் காணப்படுகிறது. பராமரிப்பு செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X