பொது செய்தி

தமிழ்நாடு

'டெல்டா மாவட்ட அறிவிப்பிலிருந்து முதல்வர் பின்வாங்க மாட்டார்'

Added : பிப் 14, 2020
Advertisement

ப.வேலூர்: ''பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டம் குறித்த அறிவிப்பிலிருந்து முதல்வர் பின் வாங்க மாட்டார்,'' என, அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ப.வேலூரில் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி பேரணியை தொடங்கி வைத்தார். ப.வேலூர் நான்கு சாலையில் தொடங்கி பேரணி, கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. பின்னர், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், 18 பள்ளிகளைச் சேர்ந்த, 1,277 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார். பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: முதல்வர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டம் குறித்து, தி.மு.க.,வினர் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றனர். ஆனால், இந்த அறிவிப்பிலிருந்து முதல்வர் பின் வாங்க மாட்டார். வரும், 24ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசின் நான்காம் ஆண்டு துவக்க விழா, பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவிப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X