பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.,20ல் இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 20ல் காய்கறிகள் சாகுபடி குறித்த பயிற்சி நடக்கிறது.
இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை முறையில், காய்கறிகள் சாகுபடி என்ற தலைப்பிலான ஒரு நாள் இலவச பயிற்சி வரும், 20ல் காலை, 9:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், அங்கக முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகள், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் நன்மைகள், தாவர வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டி கரைசல்கள் தயாரித்தல் போன்றவை செயல் விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகிறது. விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, தங்களது பெயரை, 19ல் காலை, 9:30 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரம் பெற, 04286 266345, 266650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X