பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கிராம பகுதியில் பி.எஸ்.என்.எல்.,பிராட்பேண்ட் வசதி அறிமுகம்

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, மொபைல்போன் டவரில் இருந்து, இணைய சேவையை வழங்கும் முயற்சியை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதன் முதல்கட்டமாக, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இணையதள இணைப்பு இல்லாத பகுதிக்கும், அதிவேகமாக இணைப்பு கிடைக்கும் வகையில், அதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், நேற்று மதியம் காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். இதற்கான விழா வள்ளிபுரத்தில் நடந்தது. சேலம் தொலைதொடர்பு மாவட்ட முதன்மை பொது மேளாளர் வெங்கட சுப்ர மணியம் தலைமையில் பி.எஸ்.என்.எல்., நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, புதிய சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தினர் கூறியதாவது: நாமக்கல் நகர பகுதிகளில், ஒயர் முலம் இணைப்புகளை வழங்கியுள்ளோம். பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் டவர் என்பது மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. இருப்பினும், நகர்ப்பகுதிகளில் வழங்கப்படும் பிராட்பேண்ட் வசதிபோல், கிராமப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. புதிய திட்டத்தின்படி, மொபைல்போன் டவரில் இருந்து, நேரடியாக ஒயர்லெஸ் முலம் இணைப்பு கொடுக்கும் பணிகளை துவக்கியுள்ளோம். இதற்கு பாரத் ஏர் பிராண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தனியார் லாரி பட்டறைக்கு, இந்த வசதியை செய்து கொடுத்துள்ளோம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதன் அடிப்படையில், இதை விரிவு படுத்துவோம். குறிப்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X