பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகம்

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: தமிழகம் முழுவதும், பா.ம.க.,வினர், 'டாக்டர் அன்புமணியின் லட்சியங்கள்' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். நேற்று, மாவட்ட, பா.ம.க., சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. துணை பொதுச் செயலாளர்கள் பொன்.ரமேஷ், காளியப்ப கவுண்டர் ஆகியோர் தலைமை வகித்தனர். பூங்கா சாலை, மணிக்கூண்டு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், 'ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்; தரமான கல்வியை ஏழைகளுக்கு கிடைக்கச் செய்வோம். தரமான மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்குவோம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X