பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி 2021ல் ரஜினி தேர்தலை சந்திப்பார்'

Added : பிப் 14, 2020
Share
Advertisement

ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் நேற்று ஹிந்து மக்கள் கட்சி கிளை துவக்க விழா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொதுச்செயலாளராக கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாவில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி வாழ்த்து அட்டைகளை கிழித்து, ஹிந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அர்ஜூன்சம்பத் கூறியதாவது: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை வரவேற்கிறோம். காவிரிக்கரையோர டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கிறோம். ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி, 2021ல் தேர்தலை சந்திப்பார். அதற்கு ஹிந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக்ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X