பொது செய்தி

தமிழ்நாடு

ஒளிவுமறைவின்றி கேங்மேன் தேர்வு: அமைச்சர் தங்கமணி உறுதி

Added : பிப் 14, 2020
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில், கேங்க்மேன் பணியிடம் நிரப்புவதற்காக, 90 ஆயிரம் பேர் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அதில், 15 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, விரைவில், ஒளிவுமறைவின்றி நடத்தப்படும். ஏற்கனவே உடல்தகுதி தேர்வு, தனித்தனியாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில மின்துறையினர் கூட, தமிழக மின் வாரியத்தை பார்த்து இதே போன்ற தேர்வு செய்யும் முறையை பின்பற்றி வருகின்றனர். தினமும் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு, டாஸ்மாக் கடைகளில் லாக்கர் வசதி ஏற்படுத்தி தரப்படும். வரும், கோடைகாலத்தில், 17 ஆயிரத்து, 500 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும், அதை வழங்க மின்வாரியம் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X