அரளிச் செடிகள் பராமரிக்கப்படுமா?

Added : பிப் 14, 2020
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையின் நடுவே, இரண்டு வருடங்களுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையினரால் அழகிற்காகவும், மண் அரிப்பை தடுப்பதற்காகவும் அரளிச் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது, கடும் வெப்பத்தால், ஈரப்பதம் மற்றும் தண்ணீரின்றி அவை நாளுக்கு நாள் கருகி வருகின்றன. இதனால், இயற்கை அழகு குறைந்து, மண்அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுபோலவே, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் உள்ளதால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கருகும் நிலையில் இருக்கும் செடிகளை தண்ணீர் ஊற்றி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X