இடிந்த கட்டடம் அகற்ற கோரிக்கை| Dinamalar

இடிந்த கட்டடம் அகற்ற கோரிக்கை

Added : பிப் 14, 2020
Share

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், இளநகர் துணைமின் நிலையத்தில், 20 வருடங்களுக்கு முன், அதிகாரிகள் வசிக்க குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது, அவை இடியும் தருவாயில் உள்ளன. அருகிலேயே புதிய குடியிருப்புகளை கட்டியுள்ளனர். ஆனால், பழையவற்றை அகற்றாமல் உள்ளதால், விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளது. குடியிருப்புவாசிகள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும், எந்நேரமும் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே, 'பழைய கட்டடங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X