மின்மாற்றி அருகே குப்பை எரிப்பால் அவதி

Added : பிப் 14, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதனருகே உள்ள குப்பைக்கு அப்பகுதியினர் தீ மூட்டி வருகின்றனர். இதனால், ஒயர்களில் தீ பரவி மின்மாற்றி பழுதடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால், பெரும் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அருகில் வசிப்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாவர். எனவே, அவ்விடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மீறுவோர் மீது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X