பொது செய்தி

தமிழ்நாடு

உணவில் கலப்படம் குறித்து புகாரளித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை: கலெக்டர்

Added : பிப் 14, 2020
Advertisement

கரூர்: ''உணவில் கலப்படம் குறித்து புகாரளித்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் அன்பழகன் பேசினார்.
கரூர் மாவட்டம், தோகைமலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: உணவில் உள்ள கலப்படங்களை, கண்டுபிடிக்க தெரிந்திருக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் டீத்தூள், உணவு எண்ணெய், உப்புகள் போன்றவற்றை கலப்படம் இல்லாமல் வாங்க தெரிந்திருக்க வேண்டும். ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு அங்காடி களிலும் கிடைக்கக்கூடிய தமிழக அரசின் அம்மா உப்பில், அயோடின் அதிகளவில் உள்ளது. எனவே, அதை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து, மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மா, பலா, வாழை ஆகிய கனி வகைகளில், மாம்பழத்தை கார்பைட் வைத்து பழுக்க வைக்கின்றனர். வாழையில், புகைமூட்டம் போட்டு பழுக்க வைக்கின்றனர். தர்ப்பூசணி பழம் செக்கச்சிவப்பாக இருக்க, சிவப்பு நிறச்சாயம் ஊசி மூலம் ஏற்றப்படுவதாக தெரிகிறது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை, நாம் உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் வரும். அதேபோல, டீக்கடைகளில் உள்ள பால் பாத்திரத்தில், ஊற்றப்படும் தண்ணீர் நீர்த்துப்போகாமல் இருக்க, ஒரு துணியில் ஜவ்வரிசி கட்டி வைக்கப்பட்டிருக்கும். கோழி வளர்ப்பில், எடையை அதிகளவில் கூட்டிக்காட்டுவதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகிறது. கோழியை வறுக்க, கேசரி பவுடர் பயன்படுத்தப்படுகிறது. இப்படி எதை எடுத்தாலும், கலப்பட மயமாகிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் உடலுக்கு மிகுந்த தீமையை விளைவிக்க கூடியது. எனவே, பாரம்பரிய உணவு முறையை அறிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். நம் மண்ணில் விளையும் பொருட்களை சாப்பிட வேண்டும். உணவில் உள்ள கலப்படங்களை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உணவு பொருட்கள் தொடர்பாக, 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகாரளித்த, 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X