பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 14, 2020
Advertisement

சாலை மோசம்; ஓட்டுனர்கள் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்த, நந்தன்கோட்டை பகுதியில் இருந்து, மகிளிப்பட்டி, மேட்டுமகாதானபுரம் வரை தார்ச்சாலை உள்ளது. இதன் வழியாக விவசாயிகள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல், வெற்றிலை, வாழை ஆகியவைகளை எடுத்து செல்வதற்கு பயன்படுகிறது. தற்போது இந்த சாலை, பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை தேக்கம்; வீசும் துர்நாற்றம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரம் சாலையில் உள்ள, குப்பை தொட்டியில் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். வீடுகளில் பயன்படுத்தும் கழிவு, குப்பை ஆகியவை பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தற்போது, குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்பை நிரம்பி, சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் அம்மா பூங்கா சாலையில், தென்னை மரங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், அம்மா பூங்காவிற்கு செல்கின்றனர். தற்போது சாலையோரத்தில் உள்ள தென்னை மரம் ஒன்று பட்டுப்போயுள்ளது. பலத்த காற்று அடித்தால் மரம் கீழே விழ வாய்ப்புள்ளது. மக்கள் அச்சத்துடன் வாகனங்களில் செல்கின்றனர். பட்டுப்போன தென்னை மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்படாமல் உள்ள பள்ளி கட்டடம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரம் பகுதியில், அரசு நடுநிலைப்பள்ளியில். கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி வளாகத்தில், போதுமான சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட கட்டடம் முழுமையாக பயன்படாமல் இருந்து வருகிறது. தற்போது பழமையான கட்டடத்தில், பள்ளி செயல்படுகிறது. இந்த புதிய கட்டடம் செயல்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்கலாமே.

பிச்சம்பட்டி கட்டடம் பழுது: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிச்சம்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில், 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இதன் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. கட்டடம் பழுது காரணமாக உணவு தயாரிக்கும் போது, அச்சத்துடன் வேலை பார்க்கும் நிலை உள்ளது. மையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுத்தால் நலம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X