பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு 'ஏசி' டவுன் பஸ்கள்: தொடங்கி வைத்த அமைச்சர்

Added : பிப் 14, 2020
Advertisement

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டு 'ஏசி' பஸ்களை துவக்கி வைத்தார்.
கரூர் முதல் கொடைக்கானல், ஈரோடு முதல் கும்பகோணம், திருச்சி முதல் ஈரோடு, பள்ளப்பட்டி முதல் ஏற்காடு, கரூர் முதல் பொள்ளாச்சி ஆகிய வழிதடங்களில் புதிய பஸ்களை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். மேலும், கரூர் முதல் குளித்தலை, கரூர் முதல் ப.வேலூர் என, இரண்டு 'ஏசி' டவுன் பஸ்கள் என மொத்தம், 2.30 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 'ஏசி' டவுன் பஸ்சில், 10 முதல், 35 ரூபாய் வரை, டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படும். கரூர் மாவட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளில், 76 புறநகர் பஸ்கள், ஐந்து புறநகர் 'ஏசி' பஸ்கள், 15 டவுன் பஸ்கள் உட்பட மொத்தம், 98 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில், தொழில்நுட்ப உதவியாளராக இருந்து போர்மேனாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர், ஓட்டுனராக இருந்து ஓட்டுனர் பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர், சேம ஓட்டுனராக இருந்து, தினக்கூலி ஓட்டுனராக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர், சேம நடத்துனராக இருந்து தினக்கூலி நடத்துனராக பதவிஉயர்வு பெறும், ஐந்து பேர் என மொத்தம், 17 பேருக்கு பதவி உயர்வுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,.கீதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குனர் பொன்முடி, மாவட்ட பஞ்., தலைவர் கண்ணதாசன், துணைத் தலைவர் முத்துக்குமார், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், போக்குவரத்துக்கழக கரூர் மண்டல மேலாளர் குணசேகரன், கிளை மேலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X