பொது செய்தி

தமிழ்நாடு

வெஞ்சமாங்கூடலூரில் அம்மா பூங்கா திறப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி யூனியன், வெஞ்சமாங்கூடலூர் மேற்கு பஞ்சாயத்தில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு விழா, புதிய கூட்டமைப்பு கட்டட பூமி பூஜை விழா நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜிம் வசதியுடன், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஈஸ்வரன் கோவில் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 70.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டமைப்பு கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் கவிதா, ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X