சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலையில், பெட்டிக்கடைக்காரர் தாக்கியதாக, அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் பாலசுப்ரமணியன், 53. நேற்று காலை, 8:30 மணியளவில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தில், சுகாதாரப் பணிகள் மேற்கொண்டிருந்தனர். இதை, பள்ளியருகில், பெட்டிக் கடை வைத்துள்ள தனபால், 42, புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பாலசுப்ரமணியன், தனபாலிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, தனபால், ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியர், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ஆசிரியர் தாக்கியதாக, தனபாலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமையாசிரியர் ஆறுமுகம் கூறுகையில், ''என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சுகாதாரப் பணி மேற்கொண்டதை, தனபால் புகைப்படம் எடுத்தார். இதுகுறித்து, தனபாலிடம், ஆசிரியர் பாலசுப்ரமணி கேட்டுள்ளார். அப்போது, அவரை தகாத வார்த்தை பேசி, தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்,'' என்றார். குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் கபீர் கூறுகையில், ''ஆசிரியரை தாக்கியது குறித்து தகவல் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X