நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் திண்டாட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement

கரூர்: சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையோரம், பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தர வேண்டும். கரூர், வெள்ளியணை சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலத்தை தாண்டியதும் சின்னமநாயக்கன்பட்டி, மூக்கணாங்குறிச்சி, செல்வம் நகர் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இவர்கள், சின்னமநாயக்கன்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் ஏறி செல்கின்றனர். தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு நிழற்கூடம் வசதியில்லை. மழை, வெயிலிலும் பயணிகள் நின்று செல்ல சிரமப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X