பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

Added : பிப் 14, 2020
Advertisement

அரூர்: அரூரில், தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், சித்தேரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில், 6,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: போதிய மழையின்மையால், தண்ணீர் பற்றாக்குறை நிலவிய போதும், இருக்கும் நீரைக்கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் தக்காளியை நடவு செய்தனர். கடந்த, சில நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 250 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, தரத்தை பொறுத்து, 120 முதல், 150 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அறுவடை கூலி, தக்காளியை சந்தைக்கு கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிலர் தக்காளியை அறுவடை செய்யாமல், வயலில் விட்டு விடுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், செடிகளில் உள்ள தக்காளி விரைவாக பழுப்பதால், மண்டிகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதுவும், விலை சரிவுக்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X