பொது செய்தி

தமிழ்நாடு

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: பிளஸ் 2 'ஹால் டிக்கெட் ஹார்டு காப்பி' கிடைக்க தாமதம் ஏற்படுவதால், ஜே.இ.இ., தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 படிப்பவர்கள், இரண்டு முறை ஜே.இ.இ., தேர்வு (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) எழுதலாம். கடந்த செப்., மாதம் ஆன்லைனில் பதிவு செய்த மாணவர்களுக்கு கடந்த ஜன., முதல் வாரத்தில் முதற்கட்ட ஜே.இ.இ., தேர்வு நடந்து முடிந்தது. இரண்டாம் முறையாக, கடந்த, ? முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. முந்தைய விண்ணப்பத்தில், மாணவரின் போட்டோ, கையெழுத்து, ஆதார் எண், பிற விபரங்கள், 'ஸ்கேன்டு காப்பியாக' போட்டோ வடிவில் இணைக்கப்படும். இம்முறை புதிதாக, பிளஸ் 2 ஹால் டிக்கெட்டை, பள்ளியில் இருந்து மெயிலில் 'ஹார்டு காப்பியாக' பெற்று, அதை 'போட்டோ' வடிவில் மாற்றி இணைத்தால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்கப்படும் என தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ., மாணவர்கள், கடந்தாண்டு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடிகிறது. ஆனால், தற்போது மாநில கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு, பிராக்டிக்கல் தேர்வு நடந்து வரும் நிலையிலும், ஹால் டிக்கெட் பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் அவர்களால், விண்ணப்பிக்க முடியவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான மையங்களில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பிக்க தாமதமாகும்போது, தொலை தூர மையங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படும். பள்ளி கல்வித்துறை கவனம் செலுத்தி, உடனடியாக 'ஹால் டிக்கெட் ஹார்டு காப்பி' வழங்க நடவடிக்கை எடுக்க, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: பிளஸ் 2 தேர்வுக்கு இன்னும் நாட்கள் அதிகம் உள்ளதால், ஹால் டிக்கெட் சில நாட்களில் வரும். ஹால் டிக்கெட் காப்பியை இணைக்காததால், ஜே.இ.இ., தேர்வுக்கான விண்ணப்ப போர்ட்டலில் நுழைய முடியவில்லை என்பது தெரியவில்லை. தேர்வுத்துறையில்தான் இதுகுறித்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X