பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்களுக்கு எப்.சி., சான்று வழங்ககோரி முறையீடு

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: நீதிமன்ற உத்தரவுப்படி, வாகனங்களுக்கு எப்.சி., சான்று வழங்குமாறு, ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகத்திடம், ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் கனகராஜ், தலைவர் முருகையா உள்ளிட்டோர், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கடந்த, 2015 அக்.,1க்கு முன் தயாரிக்கப்பட்ட, 8+1 வரையிலான பயணிகள் வாகனத்துக்கு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியுள்ளோம். தற்போது எப்.சி.,க்கு செல்லும்போது, போக்குவரத்து துறை தெரிவிக்கும், 11 நிறுவனங்களை சேர்ந்த புதிய வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தினால் மட்டுமே, எப்.சி., சான்று வழங்க முடியும் என்கின்றனர். இதை எதிர்த்து நெல்லையை சேர்ந்தவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடை பெற்றுள்ளார். ஆனாலும் பெரும்பாலான மாவட்டங்களில், புதிய கருவி பொருத்தினால் மட்டுமே, எப்.சி., சான்று வழங்க முடியும் என ஆர்.டி.ஓ.,க்கள் அடம் பிடிக்கின்றனர். புதிதாக வேக கட்டுப்பாட்டு கருவிக்கு, 6,000 ரூபாய் முதல், 12 ஆயிரத்து, 500 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. அவ்வாறில்லாமல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கனவே உள்ள வேக கட்டுப்பாட்டு கருவியை பரிசோதித்து, எப்.சி., சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X