சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: கொலை வழக்கில் கைதான ஏட்டை, தற்காலிக பணிநீக்கம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர், சங்கராபாளையம் பஞ்., தலைவர் சின்னதங்கம், 49; கடந்த, ?ல் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையை ஏவிய அரவிந்த், 26, கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய அரவிந்த் மாமாவான, சங்கரபாளையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு பிரபாகரன், 42, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரியும் அவரை, ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன், தற்காலிக பணிநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X