பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் கடன் அட்டை: விண்ணப்பிக்க அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

கரூர்: பிரதம மந்திரியின் உழவர் கடன் அட்டை வாயிலாக, மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம். இந்த அட்டை இல்லாத விவசாயிகள், நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கியை அணுகலாம். அட்டை விண்ணப்பித்த, 15 நாட்களில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தை, பொதுசேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். உழவர் கடன் அட்டையை ஏற்கனவே பெற்றுள்ள விவசாயிகள், தங்களின் வங்கிக் கிளையை அணுகி, கடன் தொகை வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர்கடன் அட்டை உள்ளோர், கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பதற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை, வரம்பில் சேர்ப்பதற்காக வங்கி கிளையை அணுகலாம். இத்தகவலை கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X