பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணையில் 2,180 கன அடி நீர் வரத்து

Added : பிப் 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, மாயனூர் கதவணையில், 1.05 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம், சுற்றுப்புற கிராமங்களான மாயனூர், மலைப்பட்டி, காட்டூர், மேட்டு திருக்காம்புலியூர், மணவாசி, சீப்பலாபுத்தூர், தொட்டியம், திருநாராயணபுரம், எருமைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சம்பா சாகுபடி அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மாயனூர் கதவணைக்கு, 2,180 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதில், காவிரி ஆற்றில், 880 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில், 100 கன அடி, தென்கரை வாய்க்காலில், 300 கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில், 20 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், 0.98 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கதவணை கடல் போல காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X