சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கி நகை பறிப்பு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

Added : பிப் 14, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்சாயத்து, கருங்கலாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன், 30. இவர், திருச்சியில் உள்ள தனியார் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிகிறார். தனது பல்சர் பைக்கில் விஜயராகவன் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் பரளியில் இருந்து, பெட்டவாய்த்தலை வழியாக, ராணி மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மருதூர் டவுன் பஞ்., கூடலூரை சேர்ந்த செல்வேந்திரன் மற்றும் மூன்று பேர் விஜயராகவனை வழிமறித்து, கட்டையால் தாக்கினர். அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, ஒரு மோதிரத்தை பறித்து சென்றனர். படுகாயமடைந்த விஜயராகவன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குளித்தலை போலீசார், செல்வேந்திரன் உள்பட நான்கு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X