பொது செய்தி

தமிழ்நாடு

சாய் தபோவனத்தில் மாசி மாத ஆரத்தி நிகழ்ச்சி

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், மாசி முதல் வியாழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, 'காக்கட்' என்னும் ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X