பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடாக மணல் வழங்கலால் அரசுக்கு வருவாய் இழப்பு: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

Added : பிப் 14, 2020
Advertisement

நாமக்கல்: ''அரசு மணல் விற்பனை நிலையங்களில், நூற்றுக்கணக்கான லாரிகளுக்கு முறைகேடாக மணல் வழங்குவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், அரசு மணல் விற்பனை நிலையங்கள், ஐந்து மட்டுமே உள்ளன. இணையதளத்தில் பதிவு செய்து, லோடுக்கு, மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கிறோம். நாமக்கல் மாவட்டம் ஆரியூர், வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் விற்பனை நிலையங்களில், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு என்று தினசரி முன்னுரிமை அடிப்படையில் முறைகேடாக, நூற்றுக்கணக்கான லாரிகளுக்கு மணல் வழங்கி வருகின்றனர். அதில், குறைந்த எண்ணிக்கையிலான லோடுகளை அரசு ஒப்பந்த வேலைகளுக்கு கொடுத்து விட்டு, பெரும்பாலான லோடுகளை, வெளியில், 50 ஆயிரம் ரூபாய் வரை விற்று அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இணையதள பதிவு, வெள்ளி மாலை, 4:00 மணிக்கு, ஐந்து நிமிடம் மட்டுமே பதிவு செய்கின்றனர். ஆனால், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு என்று அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் இணையதள பதிவு செய்கின்றனர். அரசு கட்டுமானப் பணிகளுக்கு வகுத்துள்ள விதிமுறைகளில், பெரும்பாலான பணிகள், எம்.சாண்டால் கட்டப்பட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, உதவிப் பொறியாளர்கள் மட்டுமே அரசுப் பணிக்கு மணல் வேண்டி இணையதளத்தில் பதிவு செய்வர். ஆனால் ஒப்பந்ததாரர்களே தங்களுக்கு வேண்டிய லாரிகளின் பதிவு எண்ணை பதிவு செய்து முறைகேடாக மணல் எடுத்துச் செல்கின்றனர். எனவே, அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்குவதை தடை செய்து, அனைத்து லாரிகளுக்கும் ஒரே இணையதள பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாட்களும் இணையதள பதிவு மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லையெனில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம். மேலும், அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசி எத்தகைய போராட்டம் நடத்துவது என்பதை முடிவு செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, இதுகுறித்து, செல்ல.ராசாமணி தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் லாரி அதிபர்கள், நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமாரிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X