பொது செய்தி

தமிழ்நாடு

சூரமங்கலத்தில் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சேலம்: வரி செலுத்த, சிறப்பு முகாம், நாளை நடக்கவுள்ளது. இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சூரமங்கலத்தில், புது கட்டட சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பாதாள சாக்கடை வைப்பு தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்தல் ஆகியவற்றுக்கு, சிறப்பு முகாம், பிப்., 15(நாளை) காலை, 8:45 முதல், மாலை, 4:45 மணி வரை, சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் நடக்கவுள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, ஏழு நாளில் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சூரமங்கலம் மண்டல மக்கள், செலுத்த வேண்டிய வரி, நிலுவையை செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சி பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X