பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்காத டவுன் பஸ்கள் ஜப்தி

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: இழப்பீடு வழங்காததால், டவுன் பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், இடைப்பாடி, புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜூ, 56. இவர், 2016ல், கொங்கணாபுரத்திலிருந்து, ஜலகண்டாபுரம் நோக்கி, மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மாணிக்கம் பட்டியில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், ராஜூ படுகாயமடைந்தார். இழப்பீடு கேட்டு, சேலம் விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்றம்-2ல் வழக்கு தொடர்ந்தார். 2018ல், 13 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் வழங்க, அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழங்காமல் இழுத்தடித்ததால், ஜப்தி செய்ய, நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, ராஜூவின் வக்கீல்கள், நேற்று, சேலம், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அடிவாரம் வந்த, '56ஏ, 56பி' எண்ணுடைய டவுன் பஸ்களை, ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X