பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 36 அணைகள் புனரமைப்பு: மத்திய அரசு திட்ட ஆய்வு குழு தகவல்

Added : பிப் 14, 2020
Advertisement

மேட்டூர்: ''தமிழகத்தில், 36 அணைகளை புனரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது,'' என, அணைகள் புனரமைப்பு திட்ட ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 89, மின்வாரிய கட்டுப்பாட்டில், 30 என, 119 அணைகள் உள்ளன. இதில், உலக வங்கி உதவியுடன், பகுதி - 2ன் கீழ், 36 அணைகளை புனரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நீர்வள ஆணைய முன்னாள் தலைவர், அணைகள் பாதுகாப்பு ஆய்வு குழு, நீர்வள இயல் தலைவர் மிட்டல் தலைமையில் ஆறு பேர் அடங்கிய, அணைகள் புனரமைப்பு திட்ட ஆய்வு குழுவினர், நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு செய்தனர். அணை கட்டடத்தை, விசைப்படகில் சென்று பார்வையிட்ட பின், குழுவினர் கூறியதாவது: தமிழகத்தில் பகுதி - 2 புனரமைப்பு திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள, மேட்டூர், பவானிசாகர், சோலையாறு, திருமணிமுத்தாறு உள்பட, 36 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அணைகளில் மேற்கொள்ள வேண்டிய, புனரமைப்பு பணி குறித்த திட்ட அறிக்கை, மார்ச்சுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக, தேர்வு செய்யப்பட்ட அணைகளை ஆய்வு செய்ய, அரசு இரு குழுக்களை அமைத்துள்ளது. அதில், ஆறு பேர் அடங்கிய எங்கள் குழு, சாத்தனூர், கெலவரப்பள்ளி அணையை ஆய்வு செய்த நிலையில், மூன்றாவதாக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். நீரியல், அணை வடிவமைப்பு குழு தலைவர் நரேஷ்குமார் மாத்தூர், பொதுப்பணித்துறை முன்னாள் சிறப்பு செயலர் பத்மநாபன், மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X