பொது செய்தி

தமிழ்நாடு

சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட சிவத் தலங்களுக்கு வரும், 20 முதல், நான்கு நாட்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும், 21ல், மஹா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது. அன்று, சிவனை வழிபட செல்லும் பக்தர்களின் வசதிக்கு, எஸ்.இ.டி.சி., சார்பில், சென்னையிலிருந்து, 50, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட முக்கிய நகரங்களிலிருந்து, 50 பஸ்கள், பிப்., 20 முதல், திருவண்ணாமலை, வெள்ளியங்கிரிக்கு இயக்கப்படும். தொடர்ந்து, 22, 23, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான எஸ்.இ.டி.சி., பஸ்களை விட, கூடுதலாக, 50 பஸ்கள், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு, இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல், கோவை கோட்டம் சார்பில், திருவண்ணாமலைக்கு, 100, வெள்ளியங்கிரிக்கு, 200, சேலம் கோட்டம் சார்பில், சேலம், நாமக்கல், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் ஆகிய இடங்களிலிருந்து, 200 பஸ்கள் திருவண்ணாமலைக்கும், 100 பஸ்கள், பவானிக்கும் இயக்கப்படும். மதுரை கோட்டம் சார்பில், 100, நெல்லையிலிருந்து, 100, விழுப்புரம் கோட்டம் சார்பில், 200 பஸ்கள், திருவண்ணா மலைக்கு இயக்கப்படும். அந்த பஸ்களை, 20 முதல், 23 வரை, முக்கிய நகர பஸ் ஸ்டாண்டுகளில், பயணியர் கூட்டத்துக்கேற்ப, தேவையான இடங்களுக்கு இயக்கிக்கொள்ள, அந்தந்த கோட்ட நிர்வாக இயக்குனர்கள், கிளை மேலாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X