சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் தாய் உள்ளிட்ட 3 பேரிடம் 14 பவுன் நகை பறிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, கோவில் கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில், அமைச்சரின் தாய் உள்பட, மூன்று பெண்களின் நகைகளை பறித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, சேவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் தாய் மரகதம்பாள், 80; கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் நகை, அதே பகுதியை சேர்ந்த சாரதாம்பாள், 65; என்பவரின் ஆறு பவுன் நகை, சரோஜா அம்மாள், 55; என்பவரின், மூன்று பவுன் நகை என மொத்தம், 14 பவுன் நகைகள் காணாமல் போனது. இது குறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X