பஞ்சாயத்து செயலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சாயத்து செயலர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'

Added : பிப் 14, 2020
Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை யூனியனில், பணிகளை சரிவர செய்யாத பஞ்., செயலர்கள் நான்கு பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த் தலைமையில், திருவண்ணாமலை யூனியன், பஞ்., செயலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், கடந்த வாரம் நடந்தது. இதில், சிலர் பங்கேற்காத நிலையில், அவர்கள் மீது புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தனி அலுவலர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, ஒரு மாதம் ஆன நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் வசம், கிராம ஊராட்சி நிர்வாக பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருந்தது; ஊராட்சியின் வரவு செலவினங்கள் குறித்த அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றாதது; உயரதிகாரிகளின் ஆணைகளை அலட்சியப்படுத்தி, தன்னிச்சையாக செயல்பட்டது என, பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பஞ்., செயலர்களான, அண்டம்பள்ளி - வசந்தி, மலப்பாம்பாடி - பாலசுப்பிரமணி, கல்லேரி - பச்சையப்பன், பவித்திரம் - ரோஸ் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X