பா.ஜ., தோல்விக்கு காங்., காரணம்: ஜவடேக்கர்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (33)
Advertisement

புனே : டில்லி தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காங்., திடீரென காணாமல் போனதே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.






புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜவடேக்கர், டில்லி சட்டசபை தேர்தலில் காங்., திடீரென காணாமல் போய் விட்டதே பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காரணம். காங்., இல்லாததால் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. காங்., காணாமல் போனது வித்தியாசமான விஷயம். மக்கள் தான் காங்., ஐ காணாமல் போக செய்திருக்கலாம் அல்லது அவர்களின் ஓட்டு ஆம்ஆத்மிக்கு சென்றிருக்கலாம்.

காங்., லோக்சபா தேர்தலில் 26 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. தற்போது டில்லி தேர்தலில் 4 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. எங்களுக்கு 42 சதவீதமும், ஆம்ஆத்மி.,க்கு 48 சதவீதமும் ஓட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக 3 சதவீதம் ஓட்டு குறைந்து விட்டது. பா.ஜ.,வுக்கு 39 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் கிடைத்தது. ஆம்ஆத்மி.,க்கு 51 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.





தேர்தலில் ஏற்ற-இறக்கங்கள் சகஜம். ஆனால் பா.ஜ., இவை அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறது. நான் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என ஒரு போதும் கூறவில்லை. இந்தியா-பாக்., ஆட்டம் போல் தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சு, கட்சியை தோல்வி அடைய வைத்துள்ளது என அமித்ஷா கூறி உள்ளது முக்கியமானது. இருந்தாலும் பிற காரணங்களும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து வருகிறோம். வெற்றி, தோல்வி இரண்டிலும் இருந்தும் பாடம் கற்று வருகிறோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
15-பிப்-202013:38:28 IST Report Abuse
Srinivasan Desikan நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் அதுக்கு காங் காரணம் , விலைவாசி உயர்வுக்கு காங் காரணம் , இப்படி எத்தனை நாளைக்கு அவங்கமேல் பழிபோட்டுகொண்டே இருப்பீர்கள், உங்கஆட்சி வந்து 6 வருடம் ஆனதாவது உங்களுக்கு தெரியுமா அல்லது இப்ப நடப்பது காங் ஆட்சி என முடிவுசெய்யலாமா
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-பிப்-202011:32:55 IST Report Abuse
ஜெயந்தன் தோல்வியில் உளறுவது சகஜமே...மோடியாலேயே தரமுடியாத நல்லாட்சியை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தந்து கொண்டிருப்பது பிஜேபி க்கு தெரியவில்லை..... அவரை தீவிரவாதி என்று வசை பாடியதால் தான் இந்த தோல்வி... பிஜேபி யின் கண்களுக்கு தேசிய வாதிகள் எல்லோரும் தீவிரவாதிகளாக தெரியும் வரை... இன்னமும் பல தோல்விகள் மட்டும் அல்ல .....மொத்தமாக காணாமல் போவதும் உறுதி...
Rate this:
Share this comment
Cancel
Tamil - Virudhunagar,இந்தியா
15-பிப்-202011:18:20 IST Report Abuse
Tamil திரு ஜவடேகர் அவர்களே டில்லி சட்டசபைத் தேர்தலில் உங்கள் கட்சி தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தானின் சதி வேலையே காரணம்... உளவுத்துறை மூலம் விசாரிக்க உத்தரவிடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X