பா.ஜ., தோல்விக்கு காங்., காரணம்: ஜவடேக்கர்| Dinamalar

பா.ஜ., தோல்விக்கு காங்., காரணம்: ஜவடேக்கர்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (33) | |
புனே : டில்லி தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காங்., திடீரென காணாமல் போனதே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜவடேக்கர், டில்லி சட்டசபை தேர்தலில் காங்., திடீரென காணாமல் போய் விட்டதே பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காரணம். காங்., இல்லாததால் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. காங்., காணாமல் போனது

புனே : டில்லி தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காங்., திடீரென காணாமல் போனதே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜவடேக்கர், டில்லி சட்டசபை தேர்தலில் காங்., திடீரென காணாமல் போய் விட்டதே பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு காரணம். காங்., இல்லாததால் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. காங்., காணாமல் போனது வித்தியாசமான விஷயம். மக்கள் தான் காங்., ஐ காணாமல் போக செய்திருக்கலாம் அல்லது அவர்களின் ஓட்டு ஆம்ஆத்மிக்கு சென்றிருக்கலாம்.

காங்., லோக்சபா தேர்தலில் 26 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. தற்போது டில்லி தேர்தலில் 4 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. எங்களுக்கு 42 சதவீதமும், ஆம்ஆத்மி.,க்கு 48 சதவீதமும் ஓட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக 3 சதவீதம் ஓட்டு குறைந்து விட்டது. பா.ஜ.,வுக்கு 39 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் கிடைத்தது. ஆம்ஆத்மி.,க்கு 51 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.


latest tamil news



தேர்தலில் ஏற்ற-இறக்கங்கள் சகஜம். ஆனால் பா.ஜ., இவை அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறது. நான் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என ஒரு போதும் கூறவில்லை. இந்தியா-பாக்., ஆட்டம் போல் தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சு, கட்சியை தோல்வி அடைய வைத்துள்ளது என அமித்ஷா கூறி உள்ளது முக்கியமானது. இருந்தாலும் பிற காரணங்களும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து வருகிறோம். வெற்றி, தோல்வி இரண்டிலும் இருந்தும் பாடம் கற்று வருகிறோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X