அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹுமாயூன்' தஞ்சை கோவிலில் அனுமதிக்கப்பட்டது எப்படி? எச்.ராஜா விளாசல்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (181)
Advertisement

சென்னை: 'சிலை வழிபாட்டை ஒழிக்கத் துடிக்கும், ஹுமாயூன் (நாம் தமிழர் கட்சி) தஞ்சை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி?' என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில், கடந்த, 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவிலுக்கு வந்தார். நேராக கருவறையில் அமர்ந்து தரிசனம் செய்து, மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின், அவர் சுவாமி தரிசனம் செய்யும் போட்டோக்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.







வறுத்தெடுத்த நெட்டிசன்கள்:



இந்த போட்டோக்களை கையில் எடுத்த நெட்டீசன்கள், மீம்ஸ்களை அள்ளி வீசினர். அதில், பொதுக்கூட்டம் ஒன்றில், 'சிவலிங்கம் என்றால் என்ன, பூ போட்டு, பால் ஊத்தும் தாய்மார்களை, யாராவது சொல்லுங்கள், அப்படி யாராவது சொல்லி விட்டால், ஹிந்து மதத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்கிறேன். மீறி விமர்சனம் செய்தால், என்னை செருப்பை கழட்டி அடிக்கலாம்' என, சீமான் பேசினார். அந்த வீடியோவை அன்று எனவும், சீமான் தரிசனம் செய்யும் போட்டோவை இன்று எனவும் குறிப்பிட்டு, செருப்பு தயாராக உள்ளதாக, என மீம்ஸ்களை வெளியிட்டனர்.

மேலும் சிலர், சீமான் சிவலிங்கத்தின் கீழ் உட்கார்ந்து சாமி கும்பிடுவது போல படத்தை போட்டு, 'சிவலிங்கத்தை என்ன என கேட்டாய், ஆனா பரம் பொருள், கீழே உட்கார வைத்து விட்டார்' எனவும், வெளியிட்டனர்.






ஹுமாயூன் நுழைந்தது எப்படி?



இந்நிலையில், பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், 'சிலை வழிபாட்டை (சிர்க் ஒழிப்பு) ஒழிக்கத் துடிக்கும், ஹுமாயூன் (நாம் தமிழர் கட்சி) தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி? இந்து அல்லாதவர், இந்துமத சின்னம் அணியாதவரை கோவிலுக்குள் அனுமதித்த அறநிலையத்துறை அதிகாரியின் மீது உடனடி நடவடிக்கை தேவை' என பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (181)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Basha - Doha,கத்தார்
20-பிப்-202011:39:22 IST Report Abuse
Mohamed Basha இவனுக்கு வேற பொழப்பே கிடையாதா ஏதாவது ஒரு புது பிரச்சினை உருவாக்கி மக்களை உசுப்பேத்துறான் நிம்மதியா வாழ விட மாட்டான் போல தெரியுது
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
17-பிப்-202020:34:29 IST Report Abuse
Gnanam கோயில், தெய்வம் எல்லாம் எல்லோருக்கும் சொந்தம். சாதி, மதம் யாவும் மனித மனதை சார்ந்தவை. மனம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மனம் மாறி மதமும் மாறலாம். ராஜா இப்படி கோயிலையும் சாமியையும் சொந்தம் கொண்டாடுவது தவறு. சூழ்நிலைக்கேற்ப மனித மனம் மாறலாம். நிரந்தரமாக ஒரே விசுவாசத்தில் மனம் நிற்காது.
Rate this:
Share this comment
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
19-பிப்-202007:46:49 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தம்பி கோவில் என்பது அங்குள்ள சுவாமியை நம்பும் பக்தர்களுக்கு மட்டுமே வழிபட உரிமையுள்ள இடம். அந்தக் கடவுளை அவமதிப்பதும் அந்தக் கடவுளை நம்புகிறவர்களை தூசிப்பதுமே தொழிலாகக் கொண்டுள்ள மாற்று மத வியாபாரிகளை அனுமதிப்பது எப்படி நியாயமாகும்?...
Rate this:
Share this comment
Cancel
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
17-பிப்-202019:18:53 IST Report Abuse
ramakrishnan balasubramanian சொல் வேறு செயல் வேறு எதிர் கட்சி தலைவர் ஆந்திராவில் பதவி ஏற்கும் போது ஜெகன் ரெட்டியுடன் பக்கத்தில் அமர்ந்த அவர் நன்றாக தெளிவாக குங்குமம் அழகாக வைத்திருக்கும் தோற்றம் வைரலாக வந்தது. அனைவரும் இங்கு தான் வேஷம். மற்ற இடங்களில் துவேசம். இவர்கள் செய்யும் நாடகங்கள் ஒன்றும் புதிதல்ல. அனைவரும் இவற்றை பார்த்துவிட்டு கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால்...உலகம் இருண்டு விடாது. இவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அம்புடுதேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X