'கோவிட்-19' அமெரிக்காவில் வேகமாக பரவ வாய்ப்பு: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement

வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எனும் 'கோவிட்-19' அமெரிக்காவிலும் வேகமாக பரவக்கூடும் என்பதால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது






சீனாவில் மட்டும் இதுவரை 1,400க்கும் அதிகமானோர் 'கோவிட்-19' வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளதையடுத்து அந்நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமைய இயக்குனர் கூறியதாவது, 'அமெரிக்காவில் 'கோவிட்-19' பரவக்கூடும் என்பதால், அது மேலும் பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை 15 பேருக்கு 'கோவிட்-19' வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதுடன் அதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





'கோவிட்-19', அமெரிக்காவில் தீவிரமாக பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் பரவுவதை தடுக்கவும் அதை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

'கோவிட்-19' வைரஸ் அமெரிக்காவிலும் பரவி வருவதையடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டுப்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் அமெரிக்காவில் நுழையும் போது 14 நாட்களுக்கு முன்னதாக சீனா சென்றிருக்க கூடாது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
15-பிப்-202014:49:15 IST Report Abuse
Sanjay கோவிட் பிறந்த இடம் முரசொலி.
Rate this:
Share this comment
Cancel
காலணிகள் பழுது நீக்குவோர் சங்கம் இந்தியா, கோவிட் - 19 வைரஸை விட மிகக்கொடிய மதமாற்ற வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
14-பிப்-202023:31:21 IST Report Abuse
Vetri Velகாலணி பழுதுல ஓட்டை .. ரெங்கநாதன் தெருவில ஒரு வைரஸ்.. வந்தா.. பாதி சென்னை மக்களுக்கு வைரஸ் வந்துடும்... அடிமை அரசு கண்ணை மூடிக்கும்..மக்கள் பாடு திண்டாட்டம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X