அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாறி, மாறி சுரண்டும் இரு கழகங்களையும் அகற்றுவோம்: கமல்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (58)
Advertisement
TNBudget,Kamal,Kamalhaasan,MakkalNeedhiMaiam,கமல்,கமல்ஹாசன்,பட்ஜெட்

சென்னை: 'தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.57 ஆயிரம் கடன் சுமை உள்ளதற்கு காரணம், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்கள் தான். இவர்களை அகற்றுவோம்' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

பட்ஜெட்டை விமர்சித்து, கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என, ஒவ்வொருவரின் தலையிலும், சுமார் ரூ.57,000 கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்கள் தான். இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். மக்கள் நீதி மய்யம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Doha,கத்தார்
15-பிப்-202014:46:16 IST Report Abuse
raja உன்னை நடிகனாக நான் பல ஆண்டுகள் ரசித்தேன் ஆனால் உன்னுடைய சொந்த வாழ்க்கை சரியில்லை நீ வந்து நாட்டை காப்பாத்த போறியா? முதலில் தமிழ் நாட்டு ஆட்டு மந்தைகளாய் இருக்கும் மக்கள் என்று திருந்துமோ அன்றுதான் நல்ல தலைவர்கள் நாட்டை ஆளுவார்கள் அதுவரை உன்னை போன்றவர்கள் ஆளத்தான் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-பிப்-202013:54:54 IST Report Abuse
தாண்டவக்கோன் நீ செஞ்சது போதும். ..கெளம்பு...காத்து வரட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
15-பிப்-202012:51:21 IST Report Abuse
Poongavoor Raghupathy First time in his life Kamalahassan has spoken a truth clearly about the looting of Dravidian Parties that led to the huge debt of the Govt. Normally Kamal's speeches are not clear for people but in this issue of debt for the Govt Kamal has spoken a truth without any usual confusion.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X