சேதமடைந்த மண்புழு உரக்கொட்டகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த மண்புழு உரக்கொட்டகை

Added : பிப் 14, 2020
Share
அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில், பயன்பாட்டிற்கு வராமலேயே மண்புழு உரக்கொட்டகை சேதமடைந்து வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில், மக்கும் குப்பையிலிருந்து, மண்புழு உரம் தயாரிக்க, 2017 - 18ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம்

அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில், பயன்பாட்டிற்கு வராமலேயே மண்புழு உரக்கொட்டகை சேதமடைந்து வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில், மக்கும் குப்பையிலிருந்து, மண்புழு உரம் தயாரிக்க, 2017 - 18ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டது.

இந்த உரக் கொட்டகையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில், வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையான, காய்கறி, பழம், இலை போன்றவை கொட்டப்பட்டு, மண்புழுக்களை விட்டு, மாட்டுசாணம் தெளித்து, பராமரித்தால் மண்புழு உரம் விற்பனைக்கு தயாராகி விடும் என்ற நோக்கில், மண்புழு உரக் கொட்டகை துவங்கப்பட்டது.ஆனால், இந்த மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டு, இரு ஆண்டுகளாகியும், பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வீணாகியுள்ளது.சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த மண்புழு உரக் கொட்டகையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X