சுகாதார வளாகம் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார வளாகம் சீரமைப்பு

Added : பிப் 14, 2020
Share

நுங்கம்பாக்கம் : கடம்பத்துார் ஒன்றியம், நுங்கம்பாக்கத்தில் இருந்து எறையாமங்கலம் செல்லும் சாலையில், ஏரிக்கரை அருகே, மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

கடந்த, 2004 - 05ல் கட்டப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது. இதனால், இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாததால், பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், சுகாதார வளாகத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 2019- - 20ம் ஆண்டு, பொது நிதியின் கீழ், 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X