தமிழ்நாடு

நகராட்சி அலட்சியத்தால் கோவிலுக்கு வருவாய் இழப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை, நகராட்சி நிர்வாகம் அகற்றாததால், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

திருத்தணி நகராட்சி சன்னிதி தெருவில், முருகன் கோவில் நிர்வாகம், மொத்தம், 27 கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளது. இக்கடைகளை, ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடுகிறது.இதன் மூலம், ஒவ்வொரு கடைக்கும், 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடப்படும். இதனால் ஆண்டுக்கு, 3 - 4.50 லட்சம் ரூபாய் வரை என, கோவிலுக்கு ஆண்டு வருவாய் கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்தாண்டு, ஜூன் மாதம் மேற்கண்ட கடைகளுக்கு ஏலம் விட்டது. இதில், ஏழு பழைய கடைகளில், ஆறு கடைகளும், 20 புதிய கடைகளில், எட்டு கடைகளும் என, மொத்தம், 14 கடைகள் மட்டும் ஏலம் போயின.மீதமுள்ள கடைகள், ஏலத் தொகை அதிகம் என, யாரும் ஏலம் எடுக்கவில்லை.

இது குறித்து, திருத்தணி முருகன் கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சன்னிதி தெருவில், ஏலம் போகாத கடைகளை பூட்டி உள்ளோம். இருப்பினும், அந்த கடைகள் முன், சிலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், கடைக்காரர்கள் வேறு வழியின்றி, கோவில் கடைகளை ஏலம் எடுப்பர் என, பலமுறை பரிந்துரை கடிதம் அனுப்பினோம். ஆனால், எவ்வித நடவடிக்கை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பிரமுகர்கள் குறுக்கீடு:

திருத்தணி சன்னிதி தெருவில், கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான, மொத்த கடைகளும் ஏலம் போகாததற்கு காரணம், சில அரசியல் கட்சி பிரமுகர்கள். இவர்கள் ஏலம் எடுக்காமல் தடுக்கின்றனர் என, கோவில் நிர்வாகத்தால் கூறப்படுகிறது.நகராட்சியில், ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் பெரும்பாலான பிரச்னைகளில் கைகோர்த்து செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

-- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X