பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பைப்புகளை சீரமைக்க வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement

பொன்னேரி : குடிநீர் கொண்டு செல்லப்படும் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் அணைக்கட்டு பகுதியில், 30க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, தத்தமஞ்சி, கம்மார் பாைளயம், சத்திரம், மனோபுரம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் கொண்டு செல்வதற்காக, 3 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுஉள்ள பிளாஸ்டிக் பைப்புகள் சேதம் அடைந்து, அதன் வழியாக, தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

மேலும், அப்பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி, அவற்றில் பாசி படிந்தும் கிடப்பதுடன், வழி போக்கர்கள் அவற்றில் உடல் உபாதைகளை கழித்து செல்கின்றனர்.இதனால், வெளிக் கழிவுகள் குடிநீருடன் கலந்து, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கோடைகாலம் தொடங்கி உள்ளதால், குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழலில், இதுபோன்று வீணாவதை தடுப்பதில், ஒன்றிய நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

பொன்னேரி- - பெரும்பேடு சாலை, பொன்னேரி- - ஆலாடு சாலைகளில், சேதம் அடைந்துள்ள, குடிநீர் செல்லும் பைப்புகளை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்கவும், சுகாதாரமாக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X